Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு பயிற்சி பெறுவோருக்காக நிறுவனப் பயிற்சி

நிறுவனப் பயிற்சி

நிறுவன / மத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட இரட்டைப் பயிற்சி.

மேற்படி செயல்முறையினூடாகப் பயிற்சி பெறுகின்றவர்களைத் தேசிய அடிப்படையிலான பயிற்சி நிறுவனங்களில் பதிவு செய்கின்ற அதே நேரத்தில், இன்றேல், பயிலுநர் பயிற்சி நிலையங்களினூடாகத் திட்டவட்டமான காலப்பகுதிக்குள் நிறுவனப் பயிற்சியாக அல்லது சேவையிலீடுபட்டுள்ளபோது பயிற்சியாக [On - the - Job Training (OJT)] அரச அல்லது தனியார் துறையின் கைத்தொழில் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். மேற்படி நிறுவனங்களில் அல்லது பயிற்சி நிலையங்களில் செயல்முறைப் பயிற்சியும் கோட்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியின் கால எல்லை ஒரு வருடம் முதல் 04 வருடங்கள் வரை வேறுபடும்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பின்வரும் கைத்தொழில்களுக்குப் பயிலுநர்களைப் பயிற்றுவிக்கின்ற அதேநேரத்தில், அவர்கள் மேற்படி துறைகளில் வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழில் முயற்சிப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

Automotive Building
Electrical Information Technology
Fish & Fishing Industry Fitting & Fabricating
Gem & Jewelry industry Metal Forming & Machining
Operative Trades
Printing
Painting & Finishing
Rubber & Plastic Products
Shoe & Leather Goods Hotel & Catering
Textile & Garment Industry
Wood Working
Clerical & Allied Nursing & Allied
Electronic & Telecommunication
Office Machinery & Precision Equipment

தேசிய அடிப்படையிலான பயிற்சி நிறுவனங்கள் என்ற வகையில் IET - கட்டுநாயக்க, ATI - கட்டுபெத்த, AETI - ஒறுகொடவத்த, ஏனைய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட நிலையங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிரதேசத்தின் மாவட்ட அலுவலகத்துடன் தொடர்பு கொள்க.

Last Updated on Wednesday, 10 July 2013 05:13  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

ஜனவரி 2017
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4