Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு பயிற்சி பெறுவோருக்காக பயிலுநர் பயிற்சி

பயிலுநர் பயிற்சி

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பயிலுநர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கின்றது. பல்வேறுவிதமான 150 திறன்கள் உள்ளடக்கக்கூடிய வகையில் 22 துறைகளில் பயிற்சிகள் நடாத்தப்படுகின்ற அதேநேரத்தில், தமது கல்வித் தகைமைகளின் பிரகாரம் மேற்படி பயிற்சி நெறிகளுக்குப் பதிவு செய்துகொள்ளச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைவிட உங்களுக்கு கிராமிய, நிலைய தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மூலம் எந்தவொரு துறையிலும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சியைப் பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வயது:

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றபோது விண்ணப்பதாரி 16 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்குக் குறைந்தவராகவும் இருக்கவேண்டும். 35 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு கௌரவ தலைவரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம் வாய்ப்பளிக்கப்படும்.

கல்வித் தகைமைகள்:

  • 01ஆம் இலக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள துறைகளுக்காக க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாமல் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல், மற்றும் கணிதம், மொழி ஆகிய பாடங்களில் கட்டாயமாகச் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (யாராவது ஒரு விண்ணப்பதாரி மொழி பாடத்தில் சித்தியடைந்து கணித பாடத்தில் சித்தியடையாவிட்டால், அவர்களுக்காக விசேட கணித பாடத் தொகுதியொன்று ஒழுங்கு செய்யப்படுகின்ற அதேநேரத்தில், அதில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும்.)
  • 02ஆம் இலக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில்களுக்காக அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறுகின்ற பாடசாலையில் 7ஆம் வகுப்பில் (ஆண்டு 8) சித்திபெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • 03ஆம் இலக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பாடங்களுக்காக அரசாங்கத்தின் மூலம் அல்லது அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறுகின்ற பாடசாலையில் 8ஆம் வகுப்பில் (ஆண்டு 9) சித்திபெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • 04ஆம் இலக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான தகைமைகள் மேற்படி பயிற்சி நெறிகள் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட கல்வித் தகைமைகளும் வயதெல்லைகளும் தொழில் தகைமை சான்றிதழ்களுக்கு (NVQ) ஏற்புடையதாகாத அதேநேரத்தில் அத்தகைய பயிற்சி நெறிகள் பின்வரும் பட்டியலில் விசேடமாகக் காட்டப்பட்டுள்ளன.

பயிலுநர் பயிற்சியிலிருந்து பெறும் பயன்கள்.

  • பயிற்சி பெறுகின்றவர்கள் வாழ்கின்ற பிரதேசத்திலேயே பயிற்சியின்போது பயிலுநர்களுக்காகத் தொழிற்சாலைகள், வேலைத்தலங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் பெறுகின்ற பயிற்சியும் உள்ளடக்கப்படும்.
  • பயிற்சி பெறுகின்ற பயிலுநர்களுக்கு மாதமொன்றுக்கு ரூபா 600/- கொடுப்பனவு உரித்தாகும். (பயிற்சியின் முதல் 06 மாதங்களுக்காக)
  • வர்த்தக பொருத்தமான தேர்வில் சித்தியடைகின்ற பயிலுநர்களுக்கு திறன் சான்றிதழ் (உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட) ஒன்று வழங்கப்படுகிறது.
  • தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
  • பயிலுநர் பயிற்சியை வெற்றிகரமாகக் கற்று முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சி பெற்றவர்களுக்காகத் தொழில் முயற்சிப் பயிற்சியுடன், ரூபா 250,000/- வரையிலான கடன்தொகை வழங்கப்படும்.

பதிவு செய்துகொள்வது எப்படி?

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை வசம் 25 மாவட்ட அலுவலகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஏற்புடையதான மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று உரிய விண்ணப்பப்படிவத்தை நிரப்பி ஒப்படைப்பதன் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும்.

Last Updated on Monday, 04 July 2011 08:32  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

ஜனவரி 2017
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4