Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு கேள்வி பதில்

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

உங்களுக்கு தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக சிக்கல்கள் உண்டா? அப்படியானால் அடிக்கடி கேட்கும் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் கீழே தரப்படுகின்றன.

விடையை காண கேள்வியின் மேல் சுடக்கவும்

  1. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சுமார் 100 மாவட்ட அலுவலகங்கள் ஊடாகப் பயிற்சி நெறிகளை நடத்துகிறது.
  2. நீங்கள் செய்ய வேண்டியது, அருகிலுள்ள மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று அங்கு தரப்படும் பயிற்சி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதாகும்.

இல்லை, எங்களுடைய ஒருசில பயிற்சி நெறிகளுக்குத் தேவையான அடிப்படைத் தகைமை 8ஆம் வகுப்பு சித்தியடைந்திருக்க வேண்டும். அதுபற்றிய விபரங்களை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் வர்த்தகப் பட்டியல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லை, உங்களுடைய கல்வித் தகைமைகள் மட்டும் போதுமானதாகும். நீங்கள் தகைமை பெறுகின்ற பயிற்சிநெறி உங்களுடைய கல்வித் தகைமை மீது தங்கியிருக்கின்ற அதே நேரத்தில், அது நீங்கள் தெரிவு செய்யும் துறைக்கும் ஏற்புடையதாகும்.

ஆம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நெறியொன்றை வெற்றிகரமாகக் கற்றுப் பூர்த்தி செய்கின்ற ஒவ்வொரு பயிலுநருக்கும் சான்றிதழ் உரித்தாகும். மேற்படி சான்றிதழ் இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

  1. பெரும்பாலான பயிற்சி நெறிகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும்.
  2. ஒருசில பயிற்சி நெறிகளுக்கு மிகக் குறைந்த சலுகைக் கட்டணமொன்று அறிவிடப்படும்.

ஆம், தொழில் முயற்சி அபிவிருத்தி அலகு, பயிற்சி பெறுநர்களுக்கு தொழில் முயற்சி அபிவிருத்திக் கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும், உதவி செய்யும்.

  1. உங்களுடைய பயிற்சியையும் கல்வியையும் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பம்.
  2. புதிய திறன்களை விருத்தி செய்துகொள்ளும்பொருட்டு கிடைக்கும் உந்து சக்தி.
  3. அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம்.
  4. மிகப் பொருத்தமான தொழில் ஒன்றில் பிரவேசிப்பதற்குக் கிடைக்கும் அனுசரணை.

ஆம், அனைத்துப் பயிற்சி நெறிகளும் இலங்கையில் உயர்வாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அதே நேரத்தில் ஒருசில பயிற்சி நெறிகள் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஆம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை தேசிய வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் திறன் விருத்தி 5வது கட்டம் வரையிலான பயிற்சி நெறிகளை நடத்துகின்றது.

கைத்தொழில் துறையில் தேவைகளை இனங்கண்டு இளைஞர் யுவதிகளின் அறிவும் திறனும் வளரக்கூடிய வகையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்படுகின்றது. அதன்மூலம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த தொழில்வாய்ப்புகளுக்காக வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 13 June 2012 06:33  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

ஜூன் 2017
ஞா தி செ பு வி வெ
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1