Sinhala (Sri Lanka)English (United Kingdom)

அறிமுகம்

எமது நோக்கு

மனிதவள அபிவிருத்தியின் மூலம் இலங்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்தச் செய்தல் மற்றும் வினைத்திறன் மிக்க பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பவர்களாக இருத்தல்.

எமது பணி

கைத்தொழிற்றுறைக்கு உயர் தொழில்சார் தரத்திற்கு ஒழுங்கான முறையில் திட்டமிட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் திறன்மிக்க மனிதவளமொன்றை உருவாக்கச் செய்வதாகும். தொழிலில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான உழைப்பு வளமொன்றை உருவாக்குவது மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கைத் தொழில் சார்ந்த பயிற்சியையும் தொழில்நுட்பப் பயிற்சியையும் வழங்குதல்.

எமது நோக்கம்

  • வாழ்க்கைத் தொழில்சார் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களைத் திட்டமிடல், ஒழுங்கு செய்தல், நடத்துதல்.
  • வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் துறையில் தரக் கட்டளையை நிர்ணயித்தல்.
  • வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் துறையுடன் சம்பந்தப்பட்ட பரீட்சைகளை நடத்துதல், சான்றிதழ்களை வழங்குதல்.
  • தேசிய வர்த்தகத் தேர்வுகளை நடத்துதல்.
  • அதனோடு சம்பந்தப்பட்ட ஆலோசனைகளைத் தயாரித்தல் மற்றும் வழங்குதல்.
  • வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் துறையில் ஆய்வுப்பணிகளும் அபிவிருத்திப் பணிகளும்.
  • பல்வேறு திறன்களை மெருகூட்டும் பொருட்டு போட்டிகளை நடத்துதல்.
  • வாழ்க்கைத் தொழிற்பயிற்சித் துறையில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள ஏனைய நிறுவனங்களின் பயிற்சி ஆற்றலின் கொள்ளளவை உயர்த்துதல்.
  • மூன்றாம்நிலை, வாழ்க்கைத் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கு வாழ்க்கைத் தொழிற்பயிற்சிப் பிரிவிலிருந்து ஆலோசனைகளை வழங்குதல்.

உள்நாட்டு, வெளிநாட்டு வாழ்க்கைத் தொழிற்பயிற்சித்துறை நிறுவனங்களுக்கிடையே, ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதன் மூலம் நடத்தப்படுகின்ற சான்றிதழ் டிப்ளோமா மற்றும் பட்டப் பாடநெறிகளுக்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தல்.

Last Updated on Wednesday, 28 January 2015 09:03  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3