Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு பயிற்சி பெறுவோருக்காக தேசிய கைத்தொழிற் பரீட்சை

தேசிய கைத்தொழில் பரீட்சை

தேசிய கைத்தொழில் பரீட்சை என்றால் என்ன?

தேசிய கைத்தொழில் பரீட்சையின் மூலம் பல்வேறு துறைகளில் படைப்பாளிகளின் தேர்ச்சியைப் பரீட்சித்தல், தரக்கட்டளை மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் என்பவற்றை மேற்கொள்கிறது. இதன்மூலம் முறைசாரா விதத்தில் தேர்ச்சியை மேம்படுத்திக்கொண்ட படைப்பாளிகளுக்காக அவர்களின் தேர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்புக் கிட்டும்.

கடந்தகால நிலையும் தற்கால நிலையும்.

தேசிய கைத்தொழில் பரீட்சை நிகழ்ச்சித்திட்டம் இந்நாட்டில் 1987ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பத்தில் நிர்மாணக் கைத்தொழிலில் சில துறைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தாலும் ICTAD நிறுவனத்தின் நிதி அனுசரணையைப் பெற்றுக்கொண்டமை மற்றும் உலக வங்கி உதவிகள் விரிவடைந்தமை என்பவற்றின் காரணமாக இந்நிகழ்ச்சித்திட்டம் தேசிய பயிலுநர் சபையின் தேசிய பணியின் ஒரு பகுதியாக இன்று மாறியுள்ளது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் அறிக்கைகளின் பிரகாரம் சுமார் 50,000 பரீட்சார்த்திகளை ஒழுங்கான மதிப்பீட்டிற்குட்படுத்தி, தற்பொழுது அவர்களில் 38,000 க்கு மேற்பட்ட பரீட்சார்த்திகளுக்குத் தேசிய கைத்தொழில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைக்குட்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளில் 80% க்கு மேற்பட்டவர்கள் நிர்மாண மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களாவர். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்ற இன்னுமொரு முக்கியமான விடயம், நிர்மாணக் கைத்தொழிலைத் தவிர்த்து ஏனைய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள சான்றிதழ் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த காலப் பகுதியில் கணிசமானளவு உயர்ந்துள்ளது என்பதாகும். எமது அதிகார சபை இம்மதிப்பீட்டு செயற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச தரத்தை மிக உயர்வாகப் பேணுகின்ற அதேநேரத்தில், அதன் காரணமாகவே, அதன் பெறுபேறாக உயர்ந்த பயனுறுதியைப் போன்று உயர்ந்த தரத்தையும் எதிர்பார்க்க முடியும்.

தேசிய கைத்தொழில் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் சில வருடங்கள் கடக்கின்றபோது அது நிர்மாணக் கைத்தொழில் துறைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தாலும் பிற்காலத்தில் தேசிய தேர்ச்சித் தரக்கட்டளை மற்றும் தேசிய கைத்தொழில் ஆராய்ச்சி ஏனைய துறைகளுக்கும் விரிவாக அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது சுமார் 53 துறைகளில் தேசிய கைத்தொழில் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டம் பரவியிருக்கின்றது.

திட்டவட்டமான கைத்தொழில் ஒன்றில் ஒரு வருடத்திற்கு மேல் அனுபவமுடைய சேவையில் ஈடுபட்டிருக்கின்ற எவருக்கும் தேசிய கைத்தொழில் பரீட்சைக்காக விரிவான துறைகளின் ஊடாக விண்ணப்பிக்கமுடியும்.

தற்பொழுது தேசிய கைத்தொழில் பரீட்சை 04 கட்டங்களின் கீழ் நடைபெறுகிறது.

தரம் 111 - பகுதிநேர பயிற்சி
தரம் 11 - தேர்ச்சி
தரம் 1 - உயர் தேர்ச்சி
CoC - திட்டவட்டமான சட்டத்துக்குள் செயற்படுகின்ற துறைகளுக்காக வழங்கப்படுகின்ற திறன் சான்றிதழாகும். உதா:- பீங்கான், செங்கல் அடுக்குகின்றவர், கனரக வாகனங்களை, இயந்திரங்களை இயக்குபவர்.

தேசிய கைத்தொழில் ஆராய்ச்சியில் யார் தோற்றுவது?

ஏதேனுமொரு துறையில் அல்லது கைத்தொழில் அனுபவமுள்ள எவருக்கும் தேசிய கைத்தொழில் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

  • முறையான பயிற்சி தேவையில்லை.
  • அச்சிடப்பட்ட சான்றிதழ்கள் அவசியமில்லை.
  • வயதெல்லை கிடையாது.

தேசிய கைத்தொழில் பரீட்சையின் பயன்கள்

சேவை பெறுநர்களுக்கு சேவைதருநர்களுக்கு
  • வளங்களைப் பயனுறுதியுள்ள வகையில் நுகர்தல்.
  • அதிகமான பதவியுயர்வு வாய்ப்புகள்.
  • சரியான பயிற்சியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போன, ஆயினும் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் பாடத்தில் பரிச்சயமானவர்களுக்கு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புண்டு.
  • வளங்கைளப் பயனுறுதியுள்ள வகையில் நுகர்தல்.
  • உயர்வான பயனுறுதி.
  • செலவைக் குறைத்தல்.
  • தேர்ச்சியைப் பரிமாறல்.
  • விரைவான உற்பத்தி.
  • இறுதி உற்பத்தியின் உயர்ந்த தரம்.
  • அதிக இலாபம்.
  • வளங்களைப் பயனுறுதியுள்ள வகையில் பயன்படுத்துதல்.
  • பயிற்சியுள்ள ஊழியர்கள் இருப்பதால் திடீர் விபத்துக்கள் குறைதல்.

NAITA’s other services with related to National Trade Tests

  • Educating Industry workmen on importance of Skills Certification.
  • Conduct of Bridging Courses for skills upgrading.
  • Conduct of promotion tests for Employees.
  • Conduct of NTT on priority basis.

Testing Areas

  • Electrical Wireman
  • Carpentry
  • Masonry
  • Plumber
  • Masonry (Block Mason)
  • Steel Fixing and Bar Bending
  • Vehicle Plant Mechanic
  • Crawler Dozer Operator
  • Motor Grader Operator
  • Motor Scraper Operator
  • Hydraulic Type Crane Operator
  • Wheel Loader Operator
  • Hydraulic Excavator Operator
  • Crawler Type Crane Operator
  • Automotive Mechanic
  • Filter (General)
  • Machinist (General)
  • Welder
  • Electrician (Power)
  • Ref, & Air Con Mechanic
  • Precast Concrete Layer
  • Roofer (Wooden)
  • Roadman
  • Stenographer (English)
  • Construction Supervisor
  • Cabinet Maker
  • Plasterer
  • Pantry Cupboard Maker
  • T.V. Radio & Electronic Equipment Repairer.
  • Automobile Electrician

Download Application Form (NTT)

தகவல் தொழில்நுட்பத்துறைப் பிரிவுகள்.

  • இலங்கை தகவல் தொழில்நுட்ப சாரதி உத்தரவுப் பத்திர சான்றிதழ். (SLCDL)
  • கணனி ஊடக பட உருவாக்கம்.
  • கணனி மென்பொருள் வன்பொருள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பயிற்சிநெறி.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சாரதி உத்தரவுப்பத்திர சான்றிதழ் (SLCDL)

இலங்கை தகவல் தொழில்நுட்ப சாரதி உத்தரவுப் பத்திரம் (SLCDL) என்பது தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தேசிய கைத்தொழில் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடத்துகின்ற சான்றிதழ் பயிற்சி நெறியாகும். இதற்காக அடிப்படைத் தகைமைகள் எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை. அத்துடன் பயிற்சியைப் பின்பற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்ற விண்ணப்பதாரிகள் அதுகுறித்த பரீட்சைக்குத் தோற்றியதன் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் செயல்முறை

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைமை நிலையத்திலிருந்து, அதன் பிரதேச மாவட்ட நிலையங்களிலிருந்து அல்லது இணையத்தள வெப்தளத்திலிருந்து பெற்றுக்கொள்கின்ற விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, அத்துடன் மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/- பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொண்ட வவுச்சருடன் இவ்வதிகார சபைக்குச் செலுத்துவதன் மூலம் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்படி கொடுப்பனவு வவுச்சரை மக்கள் வங்கி நுகேகொட கிளையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 174100170347379 இலக்கமுடைய கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

ஒழுங்கான முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தையும் கொடுப்பனவு வவுச்சரின் பிரதியையும் பின்வரும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

உதவிப் பணிப்பாளர் (மதிப்பீடு),
தேசிய கைத்தொழில் பரீட்சைகள் பிரிவு,
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை,
இல. 971, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்த,
வெலிகட, இராஜகிரிய.

தொலைபேசி : +94 11 2863680, +94 11 2888786
தொலைநகல் : +94 11 2863737

விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்க.

Last Updated on Friday, 26 April 2013 09:12  
பயிற்சி பெறுவோருக்காக
தொழில் செய்கின்றவர்களுக்கு
பதிவுசெய்தல்
ஏனைய சேவைகள்
பொதுவானது
சான்றிதழ்களின் தன்மை

முக்கியமான தொடர்புகள்

டிசெம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6